Tuesday, July 2, 2013
Saturday, June 15, 2013
வில்வம்... ஓர் அதிசய மரம்...!
வில்வம்...
ஓர் அதிசய மரம்...!
அடிமுதல் நுனி வரை அத்தனையும் பயனுள்ள மருத்துவ குணங்களை வைத்துள்ள கற்பக விருட்சம் வில்வம். வில்வ வேரை நன்றாகப் பொடிசெய்து தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து பசும்பாலுடன் தினசரி காலையில் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.
வில்வ மரத்தின் இலைகளுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவக் குணம் இருக்கிறது.
நாள் பட்ட இருமல், சளி, நெஞ்சில் கபம் சேருதல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளானவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஆகாரம் சாப்பிடுவதற்கு முன்னர் ஏழெட்டு விலவ இலைகளை நன்கு மென்று உட்கொண்டால் நல்ல குணம் தெரியும். உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் என்ற வேதியல் பொருள் சிவப்பணூக்களில் இருக்கிறதல்லவா? அந்த சிவ[ப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் விலவத்துக்கு உண்டு. செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை போன்றவையும் வில்வ இலைகளை உட்கொள்ளுவதன் மூலம்
கட்டுப்படும்.
விலவப் பழத்தின் மேல் தோல் ஓடு போல இருக்கும். அதை நெருப்பில் காட்டிப் பின்னர் அதைத் தலையில் வழுக்கை உள்ள இடத்தில் பூசி வந்தால் நல்ல பலன் தெரியும்.வில்வப் பழத்தை ஸ்ரீபலம் என்றும் அழைப்பார்கள். வில்வ பழத்தில் . புரதச்சத்து, தாது உப்புக்கள், மாவுச் சத்து, சுண்ணாம்பு இரும்பு,மற்றும் கொழுப்புச் சத்துக்கள் ஆகியன இருக்கின்றன.. மேலும் பாஸ்பரஸ், நியாசின் ஆகிய சத்துக்களும் இருக்கின்றன. சுவையாகவும் இருப்பதால் இதை ‘அப்படியே’ சாப்பிடலாம். வயிற்றுப் போக்கு மற்றும் சீத பேதி ஆகியவற்றுக்கு வில்வப் பழம் சிறந்த மருந்து.
பழத்தின் உள்ளிருக்கும் கூழ் போன்ற பசையை நல்லெண்னையில் ஊற வைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் கட்டுப் படும்,. தோல் பளபளப்பாகவும் விளங்கும். வில்வப் பழத்திலிருந்து ஜாம், பழச் சாறு, பழக் கூழ், பானங்கள், இனிப்புகள், போன்றவற்றைத் தயாரித்தும் பயன்படுத்தலாம். வில்வப் பழ விதைகளில் இருந்து ‘வில்வத் தைலம்’ என்ற எண்ணெயும் தயாரிக்கலாம். இதுவும் முடி வளர உதவும். காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் . நெஞ்சு வலி மற்றும் மூச்சடைப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
Thanks : Pasumai Vikatan

Friday, June 7, 2013
சத்துப்பட்டியல்: சூரியகாந்தி விதை
பாதாம், முந்திரி போல பருப்பு வகைகளில் முக்கியமானது சூரியகாந்தி விதைகள்.
இனிப்பு சுவையுடன் உடலுக்கு அவசியமான பல்வேறு சத்துக்கள் இதில் அடங்கி
உள்ளன. மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும் இதனை கொறித்து உண்கின்றன.
சூரியகாந்தி விதையில் உள்ள சத்துக்களை பட்டியல் போடுவோமா…
சூரியகாந்தி விதைகள் ஆரோக்கியமான எண்ணெய் தயாரிக்கப் பயன்படும். உலகம் முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. சூரியகாந்தி விதைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. நல்ல சுவையுடைய இதனை மற்ற பருப்புகள் போலவே மென்று தின்னலாம். 100 கிராம் விதைகள் 584 கலோரி ஆற்றல் வழங்கவல்லது.
இதில் நிறைந்துள்ள கொழுப்பு அமிலங்களே உடலுக்கு அதிக ஆற்றலைத் தருகின்றன. லினோலெய்க் ஆசிட் எனப்படும் பூரிதமாகாத கொழுப்பு இதில் மிகுதியாக உள்ளது. இது கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்பின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும்.
நல்ல கொழுப்புகளான எச்.டி.எல். கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். சூரியகாந்தி விதைகள் அதிக புரதம் உடைய பருப்பு வகையாகும். டிரிப்டோபான் எனும் சிறப்புக்குரிய அமினோ அமிலம் இதிலுள்ளது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக அவசியமானது. 100 கிராம் சூரிய காந்தி விதைகள் 21 கிராம் புரதம் வழங்க வல்லது.
இது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 37 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களான குளோரோஜெனிக் அமிலம், குயினிக் அமிலம், காபிக் அமிலம் அதிக அளவில் உள்ளன. குளோரோஜெனிக் அமிலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் ‘கிளைகோஜன்’ அளவை கட்டுக்குள் வைப்பதிலும் உதவும். ‘வைட்டமின்-ஈ’, சூரிய காந்தி விதைகளில் மிகுந்துள்ளது. 100 கிராம் விதையில் 35 கிராம் ‘வைட்டமின் ஈ’ உள்ளது குறிப்பிடத்தக்கது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படும். செல் சவ்வுகள் முழு வளர்ச்சி பெற உதவும்.
ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை அகற்றும் ஆற்றலும் இதற்கு உண்டு. நியாசின், போலிக் அமிலம், தயாமின், பைரிடாக்சின், பான்டோதெனிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் சூரிய காந்தி பருப்பில் நிறைய உள்ளது.
போலிக் அமிலம் டி.என்.ஏ. இணைப்புக்கு அத்தியாவசியமானது. நியாசின் ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை குறைக்கும். கால்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், மக்னீசியம், செலினியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் சூரியகாந்தி விதையில் உள்ளன.
சாப்பிடும் முறை…..
* சூரியகாந்தி விதைகளை சிறிது உப்பு சேர்த்து வறுத்து சாப்பிடலாம்.
* சாலட்களிலும் சுவைக்காக இது சேர்க்கப்படுவது உண்டு.
* சாஸ் போல தயாரித்து பிரைடு-ரைஸ் உணவுகளில் தெளித்து சாப்பிடலாம்.
* கேக் மற்றும் ரொட்டி வகைகளில் சூரியகாந்தி விதைகள் சேர்ப்பார்கள்.
* ஜெர்மனியில் ‘சன்னென் புளுமென்பிராட்’ என்ற பெயரில் சூரியகாந்தி ‘பிரெட்’ பிரபலம்.
* சூரியகாந்தி விதையில் வெண்ணெய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கும்பகோணம்
கும்பகோணம்
மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம்.இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது.
Subscribe to:
Posts (Atom)